மலையக எழில் மிகு நகராம் - கேகாலை
மலைகளும் வயல்களும் நிறைநகராம்
இதன் நடுவினிலே புதுமலர் எனவே
மாந்தர் போற்றும் நம் பள்ளி!!
சாந்த மரியாள் தமிழ் பள்ளி!!
தமிழுடன் ஆங்கிலம் சிங்களமும்
எம்மதமும் போற்றும் நம் பள்ளி
அறிவுடன் பண்பும் உயர்ந்திட என்றும்
மாந்தர் போற்றும் நம் பள்ளி!!
சாந்த மரியாள் தமிழ் பள்ளி!!
கலைமகள் மலைமகள் அலைமகளும்
வாழ்ந்து காக்கும் நம் பள்ளி
அதன் பதம் நிதம் தான் தொழுதிடுவோம்
மாந்தர் போற்றும் நம் பள்ளி!!
சாந்த மரியாள் தமிழ் பள்ளி!!
வாழ்க! வாழ்க! வாழியவே!
வாழ்க! வாழ்க! வாழியவே!
வாழ்க! வாழ்க! வாழியவே!









